திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில், யானை முகமாக முதலில் வந்த சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
இதையடுத்து சிங்க முகமாக சூரபத்மன் வர, அவரையும் முருகபெருமான் போரிட்டு வதம் செய்தார்.
பின்னர் சூரபத்மனை வதம் செய்து சேவலாகவும், கொடியாகவும் முருகப் பெருமான் ஆட்கொண்டார். அப்போது பக்தி பரவசத்துடன் "முருகனுக்கு அரோகரா" என பக்தர்கள் முழக்கமிட்டனர். சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments