தனியார் கோல்ட் லோன் நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய வளையல்களை வைத்து ரூ.81 ஆயிரம் வாங்கி மோசடி.!

0 13546

சென்னையில் தனியார் கோல்ட் லோன் நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வளையல்களை அடகு வைத்து, 81 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாசார்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையிலுள்ள கடைக்கு வந்த சங்கர்ராஜ் என்பவர், தங்க வளையல்கள் எனக் கூறி அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளார்.

பார்ப்பதற்கு ஒரிஜினல் தங்க வளையல்கள் போல் இருந்ததால், அதனை எடை போட்டு கடை ஊழியர்கள், பணம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி வளையல்கள் என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments