கண்காணிப்பு வளையத்துக்குள் ஜமேசா முபினை கொண்டுவராமல் போலீசார் கோட்டை விட்டனர் - அண்ணாமலை

0 3465

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் குறித்த தனிப்பிரிவு போலீசாரின் எச்சரிக்கை ஆவணங்களை வெளியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கண்காணிப்பு வளையத்துக்குள் அவரை கொண்டுவராமல் போலீசார் கோட்டை விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஜமேசா முபின் குறித்த தனிப்பிரிவு போலீசாரின் அறிக்கையை, டிஜிபி பார்க்கவில்லை என்பது, அவரது நேற்றைய அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளதாகவும், அண்ணாமலை குறை கூறியுள்ளார்.

வழக்கில் 6 தனிப்படை அமைத்து விசாரிப்பதாக கூறும் காவல்துறை, அடுத்த கட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்? என்றும் ஜமேஷா முபினின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிடப்பட்டதை மறுக்க முடியுமா? என்றும் காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments