பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து..!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் முன்னாள் அமைச்சர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் காமராஜர், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் ஆதரவாளர்களுடன் திருவாரூரில் இருந்து பசும்பொன் நோக்கி சென்றனர்.
மானாமதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள வைகை ஆற்று பாலத்தின் மேல் வந்து கொண்டிருக்கும்போது கார்கள் முன்னும் பின்னும் செல்லும்போது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 6 கார்கள் சேதமான நிலையில் 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments