"போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ட அனைத்திற்கும் விரைவில் பதில்'' - அண்ணாமலை டிவிட்டர் பதிவு.!

0 3587

காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்ட ஒவ்வொன்றிற்கும் விரைவில் தகுந்த பதில் வழங்கப்படும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 காவல் உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டுகள் முன்வைத்த நிலையில், அவர்கள் தங்களைக் காப்பாற்ற காவல்துறையிலிருந்து பொதுவான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக தன் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதை ஆராய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments