உக்ரைன் போருக்கான ராணுவ அணி திரட்டல் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைன் போருக்கான ராணுவ அணி திரட்டல் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன்மீது கடந்த பிப்ரவரி மாதம் திடீர் தாக்குதலை நடத்திய, ரஷ்யா பின்னடைவை சந்தித்தது.
இதையடுத்து ராணுவத்துக்கு ஆட்களை சேர்க்கும் நோக்கில், கடந்த மாதம் அணி திரட்டல் நடவடிக்கையை அறிவித்தது. இந்நிலையில், அணி திரட்டல் நடவடிக்கையின்கீழ் 3 லட்சம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 82 ஆயிரம் பேர் போர் களத்துக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், எஞ்சியோர் பயிற்சி பெற்று வருவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 275 மில்லியன் டாலர் மதிப்பில் உக்ரேன் ராணுவத்துக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் அனுப்ப இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதேபோல் வான் பாதுகாப்பு சாதனத்தையும் அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Comments