இண்டிகோ விமான என்ஜினில் தீ... விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு!

0 3757

தங்கள் நிறுவன விமானத்தின் எஞ்ஜினில் தீப்பிடித்ததற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என இண்டிகோ விளக்கமளித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து நேற்று இரவு பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்ஜினில் தீப்பொறி பறந்ததால் அந்த விமானம் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்பட 184 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், தீப்பிடித்தது தொடர்பாக ஆய்விற்காக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments