வேப்பமரம் வெட்டப்பட்ட இடத்தில் 15 நாட்களாக இருக்கும் நல்லபாம்பு

0 9256

வந்தவாசி அருகே 15 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்லப்பாம்பை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள வல்லம் சித்தேரிப் பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் அங்கிருந்த வேப்ப மரத்தை வெட்டும்போது சுமார் 6 அடி நீளமுள்ள நல்லப்பாம்பை பார்த்து பயந்திருக்கிறார்.

உடனே அங்கிருந்து சென்றவர், மறுநாள் வந்து பார்த்தபோது பாம்பு அதே இடத்தில் இருப்பதை கண்டு கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாம்பை அம்மனின் அவதாரமாக பார்த்த கிராம மக்கள் அதற்கு பூஜை செய்தும், பாலூற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments