விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றி

0 3187

ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை, வெற்றிகரமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில், இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் கிரையோஜெனிக் பரிசோதனை நடந்தது.

கிரையோஜெனிக் என்ஜின் சி20 இ 11 எம்.கே 111 பரிசோதனை, 28 விநாடிகள் நீட்டித்தது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments