அரசு மருத்துவக் கல்லூரி லிப்ட்டில் சிக்கித் தவித்த இரண்டு பேர்..!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில், லிப்ட்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரி ஊழியர்களான லேப் டெக்னீசியன் முத்துமாரி மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி, லிப்ட்டில் சென்ற போது, திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக லிப்ட் பாதியில் நின்றது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
Comments