இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த 21-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 524.520 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது. இது முந்தைய வாரத்தை விட 3.85 பில்லியன் டாலர்கள் குறைவு.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, அந்நிய செலாவணி கையிருப்பில் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் கடந்த வாரங்களில் 3.59 பில்லியன் டாலர்களும், தங்கத்தின் கையிருப்பு 247 மில்லியன் டாலர்களும் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments