திருப்பதியில் நவம்பர் 1 முதல் மீண்டும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்..!

0 4356
திருப்பதியில் நவம்பர் 1 முதல் மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்..!

திருப்பதியில் நவம்பர் 1ம் தேதி முதல், தரிசனத்திற்கு நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக டோக்கன் வழங்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட நிலையில், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று நவம்பர் முதல் மீண்டும் தொடங்குவதாக தேவஸ்தான தலைமை அதிகாரி தர்மா ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் 25 ஆயிரம் டோக்கன்களும் செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments