இன்று தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை.. 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது. 20 மாவடட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் , விழுப்புரம் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் , சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments