ரூ.5 ஆயிரம் அபராதமா..! சம்பளமே ரூ.12000 தான் கொஞ்சம் யோசிங்க சார்..! காவல்துறையின் சூறாவளி வசூல்
சென்னை எழும்பூரில் தலைகவசம், வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞருக்கு ஒட்டு மொத்தமாக போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் சாலையில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்
சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர் சிக்கினார்.
ஹெல்மெட்டுக்கு அபராதம் கட்டிட்டு சென்று விடலாம் என்று நினைத்தவரிடம், வாகன ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா ? என்று கேட்க தன்னிடம் எல்.எல்.ஆர் தான் உள்ளது என்றார் அந்த இளைஞர்.
எல்.எல்.ஆர் வைத்துக் கொண்டு சாலையில் வாகனம் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்திய போலீசார் அபராதமாக 5 ஆயிரம் ரூபாயை கட்டச்சொன்னதால் அதிர்ச்சி அடைந்தார்
தனக்கு மாதச்சம்பளமே 12 ஆயிரம் ரூபாய் தான் , 5 ஆயிரம் அபராதம் கட்டச்சொன்ன எப்படி சார் ?, கொஞ்சம் யோசிங்க சார் என்று அந்த இளைஞர் கெஞ்சினார்
அந்த இளைஞர் கெஞ்சிக் கொண்டிருந்த போதே மெஷினில் இருந்து இருந்து அபராத ரசீதை காவல் உதவி ஆய்வாளர் எடுத்ததால் அதிர்சிக்குள்ளாகி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த இளைஞர்
அதே போல அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த மற்றொரு வாகன ஓட்டி போக்குவரத்து போலீசுக்கு அபராத காணிக்கையாக 1000 ரூபாயை அள்ளிக் கொடுத்து விட்டுச்சென்றார்.
Comments