மானாமதுரை - காரைக்குடி இடையே இருப்புப் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-காரைக்குடி இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட இருப்புப் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் வழித் தடங்களையும் 2027ம் ஆண்டுக்குள் மின்மயமாக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன் ஒருபகுதியாக மானாமதுரை ரயில் நிலைய சந்திப்பு முதல் காரைக்குடி வரை 62 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணி நிறைவு செய்யப்பட்டதால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ரயில் சோதனை ஓட்டம் விடப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால், 10 முதல் 15 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் விடப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments