கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 109 வகை பொருட்கள் பறிமுதல்..!
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் வேதிப்பொருட்கள் உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் தேதி நடந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. விசாரிப்பதால், வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜமேஷா முபினின் வீட்டில் நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், ஆக்சிஜன் சிலிண்டர், பேட்டரி, வெடிப்பொருட்களில் பயன்படுத்தும் ஆணிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக, என்.ஐ.ஏ-வின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments