இயற்கை புகையிலை விற்பனைக்கு அனுமதி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 3125
இயற்கையாக அறுவடை செய்யப்படும் புகையிலையை விற்பனை செய்யத் தடையில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இயற்கையாக அறுவடை செய்யப்படும் புகையிலையை விற்பனை செய்யத் தடையில்லை என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பான் பராக், குட்கா போன்ற போதை பொருட்களைப் போல் இயற்கையாக விளையும் புகையிலையையும் விற்பனை செய்ய, தஞ்சாவூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு, இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இயற்கை புகையிலையை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தார்.

இயற்கை புகையிலையில், வெல்லம் கலந்த நீரைத் தெளித்து, எந்த ஒரு வேதியியல் பொருளையும் சேர்க்காமல் விற்பனை செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments