கோவிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு ..!

0 3053

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கருங்கடல் கிராமத்தில் கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் குத்தகைக்கு எடுத்து விட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அறநிலையத்துறைக்கு குத்தகை பணம் செலுத்தாமல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

புகாரின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் தலைமையிலான குழுவினர், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments