அமேசான் காடுகளில் சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் வெடிவைத்து தகர்ப்பு..!

0 3108

அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்க சுரங்கங்களை கொலம்பியா போலீசார் வெடிவைத்து தகர்த்தனர். 

கொலம்பியாவின் அண்டை நாடான பிரேசிலில் இருந்து வந்த நபர்கள், அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக தங்கச் சுரங்கள் அமைத்தது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சுரங்க தொழிலாளர்கள், தாதுவில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்க பயன்படுத்தும் பாதரசத்தை ஆறுகளில் ஊற்றி தண்ணீரை மாசுப்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments