பாக்.ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும் - ராஜ்நாத்சிங் சூசகம்
பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் பகுதிகளை திரும்பப் பெறுவோம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் சௌரிய திவஸை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத்சிங், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி கில்கித் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளை அடைந்த பிறகே முழுமை பெறும் என்று கூறினார். அவை இப்போது பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீரின் பகுதிகளாக உள்ளன.
இந்தியாவை முதுகில் குத்தியதாக பாகிஸ்தான் மீது சாடிய ராஜ்நாத்சிங், ஆக்ரமிப்பு காஷ்மீரில் அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது பாகிஸ்தான் ஒடுக்குமுறையை ஏவி விடுவதாகக் கண்டனம் தெரிவித்தார்.
Comments