டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் எலன் மஸ்க்-இந்திய வம்சாவளியினர் நீக்கம்.?
டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை டெஸ்லா நிறுவனத் தொழிலதிபர் எலன் மஸ்க் உறுதி செய்துள்ள நிலையில், அதன் இந்திய தலைமை அதிகாரி பாரக் அகர்வால், மற்றும் தலைமை நிர்வாகி விஜயா காடே ஆகியோரை நீக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டரை ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக்கப்போவதாகவும் பணம் சம்பாதிக்க அதனை தாம் வாங்கவில்லை என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் யாரும் எந்த விளைவுகளையும் சந்திக்காமல் எதை வேண்டுமானாலும் சொல்லி விட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கிச்சன் சிங்குடன் டிவிட்டர் அலுவலகத்தில் எலன் மஸ்க் நடந்து சென்ற படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.
Comments