இளம்பெண் மீது தாக்குதல் - காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5பேர் மீது வழக்குப்பதிவு..!
மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செருதியூரைச் சேர்ந்த அபிராமி மற்றும் வினோத்குமார் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியாவர்.
இந்நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தற்போது அபிராமி சென்னையில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் வந்த அபிராமியிடம் வினோத்குமார் மற்றும் குடும்பத்தினர்,காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், மருமகன் கார்த்திக், மகள் திவ்யா ஆகியோர் வரதட்சணை கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
Comments