ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் வசமிருந்து மீட்டெடுப்பதில் இந்தியா உறுதி - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2630

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் வசமிருந்து மீட்டெடுக்க, மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பட்கமில் நடைபெற்ற 76ம் ஆண்டு காலாட் படை தின நிகழ்ச்சியில் பேசிய அவர், மனித உரிமைகள் என்ற பெயரில் பாகிஸ்தான் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், ஆனால் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் அட்டூழியங்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

1994ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கில்ஜித், பல்டிஸ்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்டெடுக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங்,நிச்சயம் அத்தீர்மானத்தை அமல்படுத்த இந்தியா உறுதி பூண்டிருப்பதாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments