அனைத்து மாநிலங்களிலும் 2024-ஆம் ஆண்டுக்குள் என்ஐஏ கிளையை அமைக்க முடிவு - மத்திய உள்துறை அமைச்சர்

0 2850

2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அமைப்பின் கிளையை அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் சூரஜ்குந்தில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான 2 நாள் சின்டின் சிவிர் மாநாடு தொடங்கியது.

இதில் பேசிய அமித் ஷா, சைபர் கிரைம், போதை பொருள் கடத்தல், எல்லைத் தாண்டிய தீவிரவாதம், தேச துரோகம் மற்றும் பிற குற்றங்களை எவ்வாறு கையாளுவது என்ற திட்டத்தை வகுக்க இந்த மாநாடு உதவும் என்றார். 

இந்திய தண்டனையியல் சட்டம், குற்றவியல் சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் வந்துள்ளதாகவும், விரைவில் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்றும் அமித்ஷா அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments