ஒரே பைக்கில் 3 பேர் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை, நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய கும்பல்

0 11585

சேலத்தில் ஒரே பைக்கில் 3 பேர் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் அசோக், பைக்கில் சாதாரண உடையில் சின்ன திருப்பதி அருகே வந்தார். பைக்கில் 3 பேர் வேகமாக செல்வதை பார்த்த அவர், ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கேட்டார். ஆத்திரமடைந்த 3 பேரும், மேலும் சிலரும் அசோக்கை தாக்கினர்.

காயமடைந்த அசோக் கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், அப்துல் ரகுமான், ரிகான் பாஷா, அஸ்லாம் அலி, ரிஸ்வானை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments