நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மாபெரும் தியாகி..! வி.பி.துரைசாமி விமர்சனம்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு மாபெரும் தியாகி என்றும், கோவை குண்டுவெடிப்பை ஆராய குழு அமைக்காத அரசு, தாராவுக்கு பிறந்த குழந்தையை ஆராய குழு அமைத்துள்ளதாகவும் பா.ஜ.க துணைத்தலைவர் துரைசாமி விமர்சித்துள்ளார்.
தாய்மொழியான தமிழுக்கு முடிவுரை எழுத, திமுக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அபோது பேசிய வி.பி துரைசாமி, கோவை குண்டுவெடிப்பு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தாமல், நயன்தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டைக் குழந்தை எப்படி பிறக்கும்? என ஆராய, குழு அமைத்துள்ளனர் என்றும், நயன்தாராவுக்கு எத்தனை குழந்தை பிறந்தால் நமக்கு என்ன..? நயன்தாரா கணவன் ஒரு மாபெரும் தியாகி, நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது குறித்து, அவர் கம்முனு இருக்கார் என்றும் விமர்சித்தார்.
மேலும் ஓட்ட பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவருக்கு, மந்திரி பதவி குடுத்து அமைச்சராக்கினால், அவர் நயன்தாராவுக்கு பிறந்த குழந்தை குறித்து குழு அமைத்து விசாரிக்கிறார் என ஆதங்கப்பட்ட வி.பி துரைசாமி, தாராவுக்கு எத்தனை குழந்தை பிறந்தால், தமிழ்நாட்டுக்கு என்ன..? என்றும் விமர்சித்தார்.
அண்ணாமலை பேசுவதன் காரணமாகவே, கோவை குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று கூறிய வி.பி துரைசாமி, தமிழ்நாடு காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு நயன்தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து அறிய வேண்டும்.. அதுவும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று வேடிக்கையாக குறிப்பிட்டதோடு, நயன்தாரா குழந்தை மீது இருக்கும் அக்கறை, தமிழ்நாடு அரசுக்கு கோவை குண்டுவெடிப்புக்கு இல்லையே.. என்றார்
விக்னேஷ் சிவன் லால்குடியாம்...! அவன் நம்ம ஏரியா பையன்தான் போல... நல்லா இருக்கட்டும், அவர் மீது எனக்கு பொறாமைலாம் இல்லை " என்று வி.பி துரைச்சாமி தெரிவித்தார்.
Comments