தெலங்கானாவின் 4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க ரூ.100 கோடி பேரம்..? - பண்ணை வீட்டில் ரூ.15 கோடி பணம் பறிமுதல்..?

0 3135
தெலங்கானாவின் 4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க ரூ.100 கோடி பேரம்..? - பண்ணை வீட்டில் ரூ.15 கோடி பணம் பறிமுதல்..?

தெலுங்கானாவில், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பண பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் ரங்கா ரெட்டி மாவட்டம் சைபராபாதில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.

சுமார் 15 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கைதான மூவரில் நந்தகுமார் என்பவர் பிரபல ஓட்டல் உரிமையாளர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏக்களை 100 கோடி ரூபாய் கொடுத்துவிலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசார் ரெய்டு வருவதை அறிந்து பண்ணை வீட்டுக்கு வர இருந்த எம்.எல்.ஏக்கள் 4 பேர் ஓட்டம் எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments