படகு மூழ்கி ஆழ்கடலில் தத்தளித்த வங்கதேச மீனவர்கள் 20 பேர் மீட்பு..!

0 2709

இந்திய-வங்கதேச சர்வதேச கடல் எல்லையில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 20 வங்கதேச மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

சிட்ரங் புயலால் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மீனவர்கள் சென்ற படகு சாகர் தீவு அருகே ஆழ்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து, கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் கரைசேர முடியாமல் படகின் நுனியை பிடித்துக் கொண்டு மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர், அவர்களை மீட்டனர்.

நல்லெண்ண அடிப்படையில் வங்கதேச கடலோரக் காவல் படையிடம் மீனவர்கள் ஒப்படைக்கபடவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments