டாக்டர் எஸ்கேப்பாம்..! நயன் - விக்கி குட் .. பட் ஹாஸ்பிட்டல் பேடு..! ஏன் பூட்டக்கூடாதுன்னு நோட்டீஸ்

0 7001

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பரிந்துரைகடிதம் வழங்கிய குடும்ப மருத்துவரை விசாரிக்க இயலவில்லை என்றும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நெறிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ள தமிழக சுகாதாரத்துறை அந்த மருத்துவமனையின் கருத்தரித்தல் மையத்தை ஏன் மூடக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தம்பதியர் அறிவித்தது முதல், திருமணமாகி சில மாதங்களிலேயே எப்படி குழந்தைகள் பிறந்தன என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இது தொடர்பாக இருவரிடமும் உயர்மட்ட விசாரணை குழு மூலம் விசாரணை மேற்கொள்வதாக சுகாதார துறை தெரிவித்த நிலையில், விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது

விசாரணையில் இத்தம்பதியர்கள்  மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தகுதியானவரையே வாடகை தாயாக இருந்ததும் தெரிய வந்தது.

நயன் விக்கி தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையில் மருத்துவரை விசாரித்த போது, 2020-ல் நயன்தராவின் குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார்.

அந்த குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரித்த போது அவர் இடமாற்றம் செய்து சென்று விட்டதாகவும் .

அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அது உபயோகத்தில் இல்லை என்றும், மேலும் விசாரணையில் அவர் வெளி நாடு சென்று விட்டதால் அந்த குடும்ப மருத்தவரிடம் விசாரணை நடத்தவில்லை என்று இந்த குழு குறிப்பிட்டுள்ளது.

இத்தம்பதியருக்கு  பதிவு திருமணம் 11.03.2016 இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், ICMR வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் , மார்ச் மாதத்தில் கருமுட்டைகள் வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments