திருமணம் செய்துவைக்க பெற்றோர் மறுப்பு.. காதல் ஜோடி பூச்சிக்கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை..!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே, காதல் ஜோடி பூச்சிக்கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்த கோபி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 12ம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று, கோபி பெண் கேட்டபோது, 18 வயதானதும் பெண் கொடுப்பதாக கூறிய பெண்ணின் பெற்றோர், பின்னர் 3 மாதங்களாக மகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர்.
தங்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்ற அச்சத்தில், இருவரும் அலுமினியம் பாஸ்பேட் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
மயங்கிய நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
Comments