மதுபோதையில் தகராறு செய்த மகனை கடப்பாரையால் அடித்துக்கொன்ற தந்தை

0 3054

நெல்லையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை, கடப்பாரையால் அடித்துக்கொன்ற தந்தை காவல் ‘நிலையத்தில் சரணடைந்தார்.

சேதுராயன் புதூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மகாராஜன். 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாராஜன், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல மது அருந்துவிட்டு வந்த மகாராஜன், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே, குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, அங்கிருந்த கடப்பாறையை எடுத்து தாக்கியதில், மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments