நயன் - விக்கி தம்பதி வாடகை தாய் விவகாரம் - சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு
வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரத்தில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமீறலில் ஈடுபடவில்லை என்று, தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்-விக்கி தம்பதி, வாடகை தாய் ஆகியோரின் வயது, ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் முறைகளுக்கு உட்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விக்கி-நயன் தம்பதிக்கு 2016ல் பதிவு திருமணம் நடைபெற்றதாக அறிக்கை தரப்பட்டதாகவும், அதன் உண்மை தன்மை பதிவுத்துறையால் உறுதி செய்யப்பட்டதாகவும், 2021 நவம்பரில் வாடகை தாய் ஒப்பந்தம் போடப்பட்டு, 2022 மார்ச்சில் வாடகை தாய் கருப்பையில் விந்தணுக்கள் செலுத்தப்பட்டு, அக்டோபரில் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்- விக்கி தம்பதியருக்கான சிகிச்சை முறை, வாடகை தாய் உடல்நிலை குறித்த ஆவணங்களை தனியார் மருத்துவமனை பராமரிக்கவில்லை என்றும், ஆதலால் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் ? தற்காலிகமாக மூடக்கூடாது என, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments