காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்பு
சமீபத்தில் நடந்து முடிந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்கிறார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், சோனியா, ராகுல், பிரியங்கா, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பங்கேற்கின்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Comments