ஓடும் பேருந்தில் விழுந்த மழைநீர்.. நின்று கொண்டே பயணித்த பயணிகள் அவதி..!

0 2739

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் மழைநீர் விழுந்ததால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பசுவந்தனையில் இருந்து கோவில்பட்டிக்கு  இரவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து புறப்பட்ட போது பலத்த மழை பெய்துள்ளது.

இந்நிலையில் அந்த பேருந்தின் மேற்கூரையில் ஆங்காங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழைநீர் பேருந்திற்குள் விழுந்துள்ளது.

இதனால் இருக்கைகள் முழுவதும் மழைநீரில் நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments