தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.!
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகரப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகமூட்டம் காணப்படும்.
Comments