zoom தந்திர காலி பேரரசு கையில் கைலாசா விருது..! நித்தி சொன்ன அந்த வார்த்தை
சர்வதேச போலீசுக்கு சவால் விட்டு பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசுவை, zoom மீட்டிங்கில் சந்தித்து, தர்மரட்சகர் விருது வழங்கி உள்ளார். போலீசாருக்கு போக்குகாட்டி, வீடியோவில் காட்சி அளிக்கும் வில்லங்க சாமியார் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து, குறுக்கு மறுக்காக கருத்து சொல்லி வந்தவர் திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு..!
ராஜராஜ சோழன் இந்து மன்னனாக அடையாளப்படுத்துகிறார் என்ற இயக்குனர் வெற்றிமாறனுக்கு எதிராக பொங்கி எழுந்த, பேரரசுவின் மன தைரியத்தை பாராட்டி தெம்பூட்டும் விதமாக, அவருக்கு விருது வழங்கி கவுரவிக்க, பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா முடிவு செய்துள்ளார்.
அதன் படி, கைலாசாவில் இருந்து பேசுவதாக கூறி, பேரரசுவை தொடர்பு கொண்டு நித்தியுடன் சூம் மீட்டிங்கில் அமரவைத்து, அவரது திரை படங்களின் பெயர்களை ஆகா ஓகோவென்று புகழ்ந்து, பேரரசுவுக்கு தர்ம ரட்சகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச போலீசே நித்தி எங்கிருக்கிறார் என்று குழப்பம் அடைந்துள்ள நிலையில், கைலாசா என்ற பெயரில், இல்லாத நாட்டுக்கு அதிபராக இருப்பதாக கூறி, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் சாமியார் நித்தி, சூம் மீட்டிங்கை பயன்படுத்தி, தனது சிஷ்யர்களுக்கு படம் காட்டி வந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக, சினிமா, அரசியல் பிரமுகர்களுக்கும் வலைவிரிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.
Comments