சொத்து தகராறு.. தாயை அடித்து கொலை செய்த மகன்..

0 3205
கள்ளக்குறிச்சி அருகே சொத்துத் தகராறில் ஏற்பட்ட மோதலில் தாயை அடித்துக் கொலை செய்த மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே சொத்துத் தகராறில் ஏற்பட்ட மோதலில் தாயை அடித்துக் கொலை செய்த மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாக்கம்பாடியில் வேலம்மாள் என்ற மூதாட்டிக்கு சுரேஷ்குமார், வேல்முருகன் ஆகிய மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்திற்கு 16 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படும் நிலையில், இரு மகன்களும் கடனை சமமாக பிரித்து அடைக்க வேண்டும் என குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், சுரேஷ்குமார் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சுரேஷ்குமார், அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரும், வேல்முருகன் உள்ளிட்டோரும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டபோது, சுரேஷ்குமார் கம்பால் பலமாக அடித்ததில் தாய் வேலம்மாள் படுகாயமுற்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுரேஷ்குமார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments