சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு ..!
சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது. இன்று மாலை 5.11 முதல் 6.27 மணி வரையில் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இதனால் எட்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே காலை 8.11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. திருமலையில் உள்ள அன்னதான கூடம், ஹோட்டல்கள், கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கிரகணம் முடிந்த பின் கோவில் சுத்தம் செய்யப்பட்டு, இரவு 7.30 மணிக்கே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Comments