தீபாவளியை ஒட்டி அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பு.. சென்னையில் காற்று மாசுபாடு ஒன்றரை மடங்கு அதிகரிப்பு!
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால், காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசுபாட்டின் அளவாகும் என்றும் ஆனால், நேற்று இது அதிகபட்சமாக மணலியில் 265 மைக்ரான் என்ற அளவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருங்குடியில் 235 மைக்ரான் ஆகவும், ராயபுரத்தில் 219 மைக்ரான் ஆகவும் வேளச்சேரியில் 204 மைக்ரான் ஆகவும் பதிவாகியுள்ளது.
Comments