ஜெயங்கொண்டம் அருகே இரட்டை பெண்கள் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் திருப்பம்.!

0 6289

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரிய வளையம் கிராமத்தில் காளான் பறிக்க சென்ற மலர்விழி மற்றும் கண்ணகி என்ற 2 பெண்கள் தைலமரக்காட்டில் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

இந்த வழக்கில் கழுவந்தோண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீபாவளிக்கு முயல் வேட்டைக்கு சென்ற பால்ராஜ் புதரில் நடுவில் காளான் பறித்து கொண்டு இருந்த போது முயல் என நினைத்து சுளுக்கி ஆயுதம் மூலம் தாக்கி மலர்விழியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனை பார்த்த கண்ணகி சத்தம் போட்டதை அடுத்து அவரையும் பால்ராஜ் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments