காசிரங்காப் பூங்காவுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள்.. ஆர்வத்துடன் காண திரளும் பார்வையாளர்கள்!
அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்காவுக்கு இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன.
டால்மாட்டியன் பெலிக்கான் நாரைகள், கருப்பு கழுத்துடைய கொக்குகள், ஹார்ன்பில்ஸ், பச்சைப் புறாக்கள் உள்பட எண்ணற்ற வகை பறவைகள் அங்கு திரண்டுள்ளன. பனிக்காலங்களில் இந்தப் பறவைகள் இடம்பெயர்வது வழக்கம்.
கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் வந்த பறவைகள் இந்த ஆண்டு முன்னதாகவே வந்து விட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பறவைகளைக் காண்பதற்கு அங்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர்
Comments