நாளை சூரிய கிரகணம்.. தமிழகத்தில் மாலையில் 8 சதவீதப் பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும் - விஞ்ஞானிகள்!
நாளை நிகழும் சூரிய கிரகணத்தின் போது, தமிழகத்தில் மாலையில் 8 சதவீதப் பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரியனை நிலவு மறைப்பதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. உலக அளவில் பிற்பகல் 2.19 க்குத் தொடங்கி, 6.32 வரை நிகழும் சூரிய கிரகணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தெற்குப்பகுதி, கஜகஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
Comments