அயோத்தியில் தீப உற்சவ விழாவில் 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை!

0 3470

அயோத்தியில் தீப உற்சவ விழாவில் நேற்று 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. பிரதமர் மோடி முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு களித்தனர்.

அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த புதிய சாதனையை அடைய முக்கியப் பங்கு வகித்தனர்.

பிரதமர் மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் சரயூ நதிக்கரைகளில் ஏற்றி வைக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்த கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரிகள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சான்றிதழை வழங்கினர். பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments