பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அறிவிப்பு
பிரிட்டன் பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் ஒரு சிறந்த நாடு என்றும், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரிஷி சுனக், அதனால்தான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகவும் நிற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், கட்சியை ஒன்றிணைக்கவும் விரும்புவதாகவும் ரிஷி சுனக் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments