சென்னை எம்ஜிஆர் நகரில் மழைநீர் வடிகாலில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி..!
சென்னை எம்ஜிஆர் நகரில், மழைநீர் வடிகாலை தாண்ட முயற்சித்து அதில் தவறி விழுந்து படுகாயமடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், சென்னையில் தங்கி தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்றிரவு பணி முடித்து திரும்பிய அவர், காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகாலை தாண்டும் போது, தவறி பள்ளத்தில் விழுந்ததில் கம்பிகள் குத்தி காயமடைந்தார். இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments