தீபாவளி சிட் பண்ட் நடத்தி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு.. பெண் உட்பட 3 பேரை சிறைபிடித்த கிராமமக்கள்!

0 3555

அரக்கோணம் அருகே தீபாவளி சிட் பண்ட் நடத்தி மோசடி செய்ததாகக்கூறி, பெண் உள்பட 3 பேரை கிராமமக்கள் சிறைபிடித்தனர். 

செய்யாற்றில் இயங்கிவந்த ”செல் டயல்” என்ற நிதி நிறுவனம், தீபாவளி சிட் பண்டில் இணைபவர்களுக்கு தங்க நாணயம், தங்க மூக்குத்தி உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான பொருட்களை வழங்குவதாகக்கூறி, 80 லட்ச ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

தீபாவளி நெருங்கியதை அடுத்து, பணம் செலுத்தியவர்கள் பரிசுப்பொருட்களை கேட்கவே, முறையாக பதிலளிக்காததால், பணத்தை வசூலித்த லதா, உறவினர் ராஜவேலு, கார் டிரைவர் ஆகியோரை மக்கள் சிறைபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments