திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை முகத்தில் கரியை பூசி, பொதுவெளியில் மொட்டை அடித்த கொடூரம்.. பாஜக நிர்வாகிக்கு வலைவீச்சு!

0 3482

உத்திரப்பிரதேசத்தில் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரின் முகத்தில் கரியை பூசி, தலையில் மொட்டையடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

பஹ்ரைச் பகுதியில் உள்ள வீட்டில் கழிவரை இருக்கையை திருடியதாகக் கூறி 30 வயதான கூலித்தொழிலாளி ராஜேஷ் குமார் என்பவரை உள்ளூர் பாஜக நிர்வாகி ராதிஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேர் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரது முகத்தில் கரியை பூசி, தலையில் மொட்டையடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராதிஷ்யா மிஸ்ராவை தேடி வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments