முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோவிற்கு திடீர் உடல் நலக்குறைவு

0 3022

சீன கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ உடல்நலக்குறைவால் பாதியிலேயே வெளியேறினார்.

சீனாவில் ஷி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகத் தேர்வு செய்வதற்கான 20வது காங்கிரஸ்  கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

அப்போது 79 வயதான முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவோ வெளியே அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், உதவியாளர்கள் உதவியுடன் அருகில் இருந்த அறையில் ஓய்வு எடுத்ததாகவும் பின்னர் அவர் நலமடைந்ததாகவும் அவருடைய பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments