மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியரின் இதயம் கிரீன் காரிடர் மூலம் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது.
ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் வலிப்பு வந்து வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.
ஒசூர் காவேரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பிரபாகரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் சம்மதித்தனர்.
இதையடுத்து கண் விழிகள் பெங்களூருவுக்கும், சிறுநீரகங்கள் கோவைக்கும் அனுப்பபட்ட நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் ஆம்புலன்ஸில் 140 கி.மீ வேகத்தில் ஒசூரிலிருந்து சென்னைக்கு கிரீன் காரிடார் மூலம் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது
Comments