சாப்ட்வேர் கம்பெனி நடத்துவதாக கூறி போதைப்பொருள் கடத்தல்- குடும்பத்தினருக்கு தனது நாடகம் தெரிந்துவிடும் என அஞ்சி விசாரணை கைதி விபரீத முடிவு..!
சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில் விசாரணை கைதி ஒருவர், மத்திய போதைப்பொருள் அலுவலக 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனியை 48 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் சோழவரம் அருகே மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓடிச் சென்று கீழே குதித்த அவரை, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார், காவல் விசாரணையில் மரணம் அடைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதும், போலீசார் கைது செய்தது குடும்பத்துக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
Comments